/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்னுயிர் காப்போம் திட்ட பயனாளிகள் 12 ஆயிரம் பேர்
/
இன்னுயிர் காப்போம் திட்ட பயனாளிகள் 12 ஆயிரம் பேர்
ADDED : ஆக 21, 2024 04:12 AM
மதுரை, மதுரையில் தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 12 ஆயிரத்து 322 பேர் ரூ.15 கோடியே 35 லட்சத்து 54 ஆயிரத்து 150 மதிப்பிலான சிகிச்சை பெற்றுள்ளனர் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்பை குறைக்க அரசால் உருவாக்கப்பட்டதே இன்னுயிர் காப்போம் திட்டம். விபத்தில் பாதித்த முதல் 48 மணி நேரத்திற்கு கட்டணமின்றி சிகிச்சை அளிக்கப்படும். இதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 81 வகை மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு ஒருநபருக்கு ரூ.1 லட்சம் வரை செலவினம் மேற்கொள்ளப்படும். அங்கீகரிக்கப்பட்ட அரசு, தனியார் மருத்துவமனைகள் பற்றிய விவரங்கள் மாவட்ட வாரியாக வலைத்தளங்களில் (cmsghistn.com) வெளியிடப்பட்டுள்ளன. இத்திட்டம் குறித்து அறிய கட்டணமில்லா தொலைபேசி எண் 104ஐ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

