/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
13 இடங்களில் நடமாடும் சிறப்பு மருத்துவ முகாம்கள் மாநகராட்சியில் மழைக்கால ஏற்பாடு

ADDED : அக் 19, 2024 04:30 AM
மதுரை : மதுரையில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மாநகராட்சியில் 13 இடங்களில் நடமாடும் சிறப்பு மருத்துவ முகாம்களை நேற்று மேயர் இந்திராணி பொன்வசந்த் துவக்கி வைத்தார்.
மழைக் காலத்தில் காய்ச்சல், நோய்களை தடுக்கும் வகையில் இம்முகாம்களை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி மாநகராட்சி 57வது வார்டு கரிமேடு மோதிலால் மெயின் ரோடு பகுதியில் சிறப்பு முகாமை மேயர் துவக்கி வைத்தார். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இதுபோல் ஆனையூர், பீபிகுளம், மீனாம்பாள்புரம், செல்லுார் கீழத்தோப்பு, விராட்டிபத்து, அருள்தாஸ்புரம், மேலப்பொன்னகரம், பொன்மேனி, பழங்காநத்தம், சோலையழகுபுரம், திருநகர், திருப்பரங்குன்றத்திலும் முகாம்கள் நடந்தன. இதில் மருத்துவ பரிசோதனை, ரத்த அழுத்தம், நீரிழிவு பரிசோதனை நடத்தப்பட்டது. காய்ச்சல் அதிகம் உள்ளவர்கள் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
துவக்க நிகழ்ச்சியில் துணைமேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், நகர்நல அலுவலர் இந்திரா, உதவி அலுவலர் அபிஷேக், நகர்ப்புற உதவி திட்ட மேலாளர் ஸ்ரீகோதை, சுகாதார ஆய்வாளர் கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.