/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
1332 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா
/
1332 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா
ADDED : மார் 07, 2024 05:54 AM
வாடிப்பட்டி: வாடிப்பட்டி தாலுகாவில் கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஏழை, எளியோர், மாற்றுத்திறனாளிகள், நரிக்குறவர்கள், திருநங்கைகள் உள்ளிட்ட 1332 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடந்தது.
கலெக்டர் சங்கீதாதலைமை வகித்தார்.டி.ஆர்.ஓ., சக்திவேல் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ., வெங்கடேசன் வரவேற்றார். அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
அவர் பேசியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியில் எந்த நலத்திட்ட உதவியும் வழங்கவில்லை. தி.மு.க., பொறுப்பேற்ற நாள் முதல் மக்கள் நலனில் முழு அக்கறை காட்டி ஒவ்வொரு திட்டத்தையும் செயல் வடிவமாக மாற்றி வருகிறது. அரசு அதிகாரிகளை தேடி மக்கள் சென்ற நிலை மாறி, இன்று மக்களை தேடி அதிகாரிகள் வந்து மனுக்களை பெற்று குறைகளை நிவர்த்தி செய்யும் முதல்வராக ஸ்டாலின் செயல்படுகிறார் என்றார்.
பேரூராட்சி தலைவர்பால்பாண்டியன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், பசும்பொன் மாறன், தன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக் பங்கேற்றனர்.

