ADDED : ஜூன் 04, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் உட்பட 34 பேர் காய்ச்சலுக்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 30 படுக்கைகளுடன் கூடிய தனிமை வார்டில் இதுவரை காய்ச்சலுக்கு அனுமதிக்கப்படவில்லை. 34 பேரும் வைரஸ் காய்ச்சல், பல்வேறு நோய்களால் உருவான காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.
சுகாதாரத்துறை கணக்கெடுப்பின் படி மதுரையில் நேற்று 14 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் 24 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா, டெங்கு காய்ச்சல் பதிவாகவில்லை.