/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'டெட்' தாள் 2 தேர்வு 1777 பேர் 'ஆப்சென்ட்'
/
'டெட்' தாள் 2 தேர்வு 1777 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : நவ 17, 2025 01:58 AM
மதுரை: மதுரையில் நேற்று நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) தாள் 2 தேர்வில் 1777 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.
மாவட்டத்தில் இத்தேர்வுக்கு 14 ஆயிரத்து 800 பேர் விண்ணப்பித்தனர். 52 மையங்களில் தேர்வு நடந்தது. 13 ஆயிரத்து 23 பேர் தேர்வு எழுதினர்.
காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை தேர்வு நடந்தது. போலீஸ் பரிசோதனைக்கு பின் மையங்களுக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுடன் பி.எட்., தகுதியுள்ளோருக்கும், டெட் தேர்ச்சி கட்டாயம் என்பதால் தற்போது ஆசிரியர் பணியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பலரும் இத்தேர்வில் பங்கேற்றனர்.
மாவட்ட நோடல் அதிகாரியான தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் தேர்வுப் பணிகளை கண்காணித்தார். சி.இ.ஓ., தயாளன், டி.இ.ஓ., செந்தில்குமார் மையங்களை ஆய்வு செய்தனர்.
தேர்வு எழுதியவர்கள் கூறுகையில், மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டன.
தமிழ், ஆங்கிலத்தை முதன்மை பாடமாக கொண்டவர்களுக்கு அறிவியல், வரலாறு பகுதிகளில் அதிக வினாக்கள் கேட்கப்பட்டதால் சற்றே கடினமாக இருந்தது. ஆனால் தேர்ச்சி பெற்று விடலாம் என்றனர்.

