நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கலைஞர் நுாலகத்தில் 'நுால் அரும்புகள்' எனும் சிறுவர் நிகழ்ச்சி நடந்தது.
சிறுவர்கள், தாங்கள் விரும்பி வாசித்த நுால்களை விமர்சனம் செய்தனர். அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அவர்களின் கவனத்தை வளர்க்கும் வகையில் திறன் விளையாட்டுகள், கதை சொல்லுதல், காகிதங்களில் வண்ணம் தீட்டுதல், வார்த்தைகளை இணைத்து அடையாளம் காணுதல் உள்ளிட்ட பயிற்சிகளை மனநல ஆலோசகர் ருக்மணிதேவி வழங்கினார்.

