/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை விளாங்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.98 லட்சம் பறிமுதல்
/
மதுரை விளாங்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.98 லட்சம் பறிமுதல்
மதுரை விளாங்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.98 லட்சம் பறிமுதல்
மதுரை விளாங்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.98 லட்சம் பறிமுதல்
ADDED : நவ 09, 2024 06:31 AM

மதுரை : மதுரை விளாங்குடி பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகத்தில் 5 மணி நேரம் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனையிட்டு கணக்கில் வராத ரூ.1.98 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
இந்த அலுவலகத்தின் சார்பதிவாளராக இருப்பவர் வீரகுமார். இங்கு பத்திரம் பதிய புரோக்கர்கள், சில பத்திர எழுத்தர்கள் மூலம் லஞ்சம் பெறுவதாக லஞ்சஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது. டி.எஸ்.பி., சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சூர்யகலா, குமரகுரு, ரமேஷ்பிரபு உள்ளிட்டோர் நேற்று மாலை 5:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
கம்ப்யூட்டர் அறை, 3 பத்திர எழுத்தர்கள், அலுவலகத்திற்கு 'வசூல்' செய்து கொடுப்பவர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து ரூ.1.98 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. வீரகுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இங்கு பொறுப்பேற்றார். அலுவலகத்தில் எந்த 'டீலிங்'கும் செய்யாமல் அலுவலகம் எதிரே அறை வாடகைக்கு பிடித்து அங்கு தனது கார் டிரைவர் குமார் மூலம் லஞ்சம் பெற்று வந்தது தெரியவந்தது.