ADDED : மே 22, 2025 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் தாலுகா வி.ராமசாமிபுரம் ஓடையில் டிராக்டரில் மணல் திருடுவதாக சாப்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று அணைக்கரைப்பட்டி ஜெயராமன் 26, சதீஷ் 22 ஆகிய 2 பேரை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
தப்பி ஓடிய வி.ராமசாமிபுரம் ரஞ்சித்தை போலீசார் தேடி வருகின்றனர்.