/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்தில் தரிசனத்திற்கு 2 மணி நேரம் காத்திருப்பு
/
குன்றத்தில் தரிசனத்திற்கு 2 மணி நேரம் காத்திருப்பு
குன்றத்தில் தரிசனத்திற்கு 2 மணி நேரம் காத்திருப்பு
குன்றத்தில் தரிசனத்திற்கு 2 மணி நேரம் காத்திருப்பு
ADDED : டிச 16, 2024 05:21 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று பவுர்ணமி மற்றும் விடுமுறை தினமானதாலும், மழை இல்லாததாலும், டிச. 13ல் கார்த்திகை தீப திருநாள் அன்று கன மழை பெய்ததால் அன்றைய தினம் கோயிலுக்கு வர இயலாத பக்தர்களும் நேற்று சுவாமி தரிசனத்திற்கு வந்தனர். முருகன், ஐயப்ப பக்தர்களும் ஏராளமானோர் வந்தனர். நகரில் பக்தர்களின் கூட்டம் நேற்று அதிக அளவில் இருந்தது.
இலவச தரிசன பக்தர்கள் சரவணப் பொய்கை செல்லும் பாதை வரையிலும் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். அவர்கள் சுவாமி தரிசனம் செய்ய 2 மணி நேரத்திற்கும் மேலாகியது.
கட்டண தரிசன பக்தர்களும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். மூலஸ்தானத்தில் கட்டண தரிசன பக்தர்கள் 2 வரிசையிலும், இலவச தரிசன பக்தர்கள் 2 வரிசையிலும் செல்ல பாதை ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
நேற்று மதியம் ஒரு மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டாலும் பக்தர்கள் தரிசனம் முடித்து வெளியில் வருவதற்கு மதியம் 2:30 மணி ஆகியது.