ADDED : அக் 29, 2024 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: திருவாதவூர்-பூவந்தி ரோடு இடையே ஒரு குவாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 108 கிலோ கஞ்சாவை மதுரை போதைப்பொருள் நுண்ணறிவு போலீசார் 2015ல் பறிமுதல் செய்தனர்.
திருவாதவூர் விஜயகுமார் 35, பேரையூர் அருகே காளப்பன்பட்டி காசிமாயன்45,மீது வழக்கு பதிந்தனர். இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து போதைப்பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டார்.

