/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பஸ்சில் வந்து 2 கி.மீ., நடைபயணம் மொட்டைமலை மக்களின் பரிதாபம்
/
பஸ்சில் வந்து 2 கி.மீ., நடைபயணம் மொட்டைமலை மக்களின் பரிதாபம்
பஸ்சில் வந்து 2 கி.மீ., நடைபயணம் மொட்டைமலை மக்களின் பரிதாபம்
பஸ்சில் வந்து 2 கி.மீ., நடைபயணம் மொட்டைமலை மக்களின் பரிதாபம்
ADDED : பிப் 18, 2024 01:03 AM

திருநகர்: மதுரை விளாச்சேரி மொட்டைமலை பகுதிக்கு அரசு டவுன் பஸ் வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள், மாணவர்கள் சிரமம் அடைகின்றனர்.
குரும்பன், ஆறுமுகம் கூறியதாவது: மொட்டை மலை பகுதியில் வேளார் காலனி, எம்.ஜி.ஆர்., காலனி, கலைஞர் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. மதுரையிலிருந்து விளாச்சேரி வரை மட்டுமே டவுன் பஸ் வசதி உள்ளது. அங்கிருந்து மொட்டை மலை 2 கி.மீ., துாரம் உள்ளது. மாணவர்கள் பலர் விளாச்சேரி பள்ளிகளுக்கும், மதுரை பள்ளிகளுக்கும் செல்கின்றனர். ஏராளமான மக்கள் வேலைக்கு செல்கின்றனர். அவர்கள் விளாச்சேரிக்கு நடந்தோ அல்லது ஆட்டோவிலோ தான் வர வேண்டும்.
பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து மொட்டைமலைக்கு தனி டவுன் பஸ் இயக்க வேண்டும். அல்லது விளாச்சேரிக்கு வரும் பஸ்களை மொட்டைமலை வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.