/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பள்ளிகளுக்கு அருகில் 2 மதுக்கடைகள்
/
பள்ளிகளுக்கு அருகில் 2 மதுக்கடைகள்
ADDED : மே 13, 2025 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : பள்ளிகளுக்கு 200 மீட்டர் துாரத்திற்குள் போதை பொருட்களை விற்க தடையுள்ள நிலையில் திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் எதிரில் மதுக்கடை உள்ளது.
இதன் 50, 100 மீட்டர் துாரத்தில் இரு பள்ளிகள் உள்ளன. ஆனந்தா தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள மதுக்கடையில் இருந்து 40 மீட்டர் துாரத்திற்குள் இரு பள்ளிகளும், 100 மீட்டருக்குள் ஒரு மெட்ரிக் பள்ளியும் உள்ளன.
தே.மு.தி.க., கவுன்சிலர் ராஜகுரு கூறுகையில், ''தனியார் மீது நடவடிக்கை எடுக்கும் போலீசார் அரசு மதுக்கடைகள் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை. இக்கடைகளை வேறு இடங்களுக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.