/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மார்ச் 20ல் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
/
மார்ச் 20ல் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
ADDED : மார் 16, 2024 07:45 AM
மதுரை : மதுரை நகர் ஊர்க்காவல் படைக்கு மார்ச் 20ல் ஆயுதப்படை மைதானத்தில் ஆள் சேர்ப்பு நடக்கிறது.
விருப்பமும், சேவை மனப்பான்மை உள்ள பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாத 20 - 40 வயதுள்ளவர்கள் சேரலாம்.
ஆண்கள் குறைந்தது 165 செ.மீ., பெண்கள் 155 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். என்.சி.சி., விளையாட்டு வீரர், வீராங்கனைகள், அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் தல்லாகுளம் கோகலே ரோட்டில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் மார்ச் 18,19ல் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை விண்ணப்பம் பெறலாம். தேர்வுக்கு வரும்போது அசல், நகல் சான்றுகள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள், ஆதார் அட்டையுடன் வரவேண்டும்.

