/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் அடுத்தடுத்து மறியல் 760 பெண்கள் உட்பட 2180 பேர் கைது
/
மதுரையில் அடுத்தடுத்து மறியல் 760 பெண்கள் உட்பட 2180 பேர் கைது
மதுரையில் அடுத்தடுத்து மறியல் 760 பெண்கள் உட்பட 2180 பேர் கைது
மதுரையில் அடுத்தடுத்து மறியல் 760 பெண்கள் உட்பட 2180 பேர் கைது
ADDED : பிப் 17, 2024 05:19 AM

மதுரை: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், புதிய பென்சன் திட்டம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் பல்வேறு இடங்களில் மறியலில் ஈடுபட்ட 760 பெண்கள் உட்பட 2180 பேர் கைது செய்யப்பட்டனர்.
அனைத்து துறை தொழிற்சங்கங்கள் மதுரை ரயில்வே ஸ்டேஷனை முற்றுகையிட்டு மறியலில்ஈடுபட்டனர். எம்.பி., வெங்கடேசன் தொடங்கிவைத்தார். துணை மேயர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருநகரில்சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் ஐடாஹெலன் தலைமையில் பஸ் மறியல்நடந்தது. நிர்வாகிகள் பாண்டி, பிச்சை ராஜன், மகாலட்சுமி, காளிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 720 பெண்கள் உட்பட 1250 பேர் கைது செய்யப்பட்டனர்.
உசிலம்பட்டியில் சி.ஐ.டி.யு., மாநில குழு உறுப்பினர் கவுரி, மின் ஊழியர் சங்கம் மாயன், போக்குவரத்து துறை குமார், மாதர் சங்கம் எழில் அமுதா, விவசாய சங்கம் குமாரசாமி, மா. கம்யூ., ஒன்றிய செயலாளர் ராமர், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலுாரில் சி.ஐ.டி.யு.,ஏ.ஐ.கே.எஸ்., ஏ.ஐ.ஏ.டபுள்.யூ, ஏ.ஐ.டி.யு.சி., பி.கே.எம்.யு. சார்பில் மறியல் நடந்தது. சி.ஐ.டி.யு., மாவட்ட உதவி தலைவர் சவுந்திரராஜன் தலைமை வகித்தார். தாலுகா நிர்வாகிகள் மணவாளன், சேகர், ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகிகள் மெய்யர்,மா.கம்யூ., தாலுகா செயலாளர் கண்ணன், அடக்கிவிரணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புறநகரில் 40 பெண்கள் உட்பட 170 பேர் கைது செய்யப்பட்டனர்.