/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஓட்டலில் ‛'கிரில் சிக்கன்' சாப்பிட்ட 22 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு; அரசு மருத்துவமனையில் 8 பேர் அனுமதி
/
ஓட்டலில் ‛'கிரில் சிக்கன்' சாப்பிட்ட 22 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு; அரசு மருத்துவமனையில் 8 பேர் அனுமதி
ஓட்டலில் ‛'கிரில் சிக்கன்' சாப்பிட்ட 22 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு; அரசு மருத்துவமனையில் 8 பேர் அனுமதி
ஓட்டலில் ‛'கிரில் சிக்கன்' சாப்பிட்ட 22 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு; அரசு மருத்துவமனையில் 8 பேர் அனுமதி
ADDED : பிப் 06, 2025 06:24 AM

மதுரை; மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரையில் உள்ள ப்ரீடா ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு 'கிரில் சிக்கன்' சாப்பிட்ட 22 பேருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. 8 பேர் சோழவந்தான் அரசு மருத்துவமனையிலும் 2 பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு சோழவந்தான் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த 25 க்கும் மேற்பட்டோர் இங்கு 'கிரில் சிக்கன்' சாப்பிட்டுள்ளனர். பெரும்பாலானோருக்கு அன்றிரவே வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. நேற்று காலை வரை சோழவந்தான் அரசு மருத்துவமனையில் 17 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் 9 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
உள்நோயாளியாக சிகிச்சை பெறும் குருவித்துறையைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் மதுசூதனன், 21 கூறுகையில், ''நண்பர்கள் வீரபாண்டி, அபினேஷ் உடன் சேர்ந்து 'கிரில் சிக்கன்' ஒன்று வாங்கி சாப்பிட்டோம். வீடு வந்தபின் சோர்வாக இருந்தது.
காலையில் வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் சோழவந்தான் அரசு மருத்துவமனை வந்தோம். நண்பர்களுக்கு பரவாயில்லை. எனக்கு பாதிப்பு அதிகமானதால் சிகிச்சையில் உள்ளேன்'' என்றார்.
உணவுப்பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஜெயராம பாண்டியன் கூறியதாவது:
ஓட்டலை ஆய்வு செய்த போது 'கிரில் சிக்கன்' மீதமோ, இறைச்சியோ இல்லை. லைசென்ஸ் பெற்றுள்ளனர். கடை சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால் ரூ.2000, பாலிதீன் பை வைத்திருந்ததால் ரூ.2000 அபராதம் விதித்துள்ளோம். எண்ணெய், மசாலா, மூலப்பொருட்கள் உட்பட 7 உணவு மாதிரிகளை சேகரித்துள்ளோம். 9 உணவு மாதிரிகள் மதுரை அரசு மருத்துவக்கல்லுாரி மைக்ரோ பயாலஜி ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். ஆய்வு முடிவுகளின் படி ஓட்டல் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் செல்வராஜ் கூறுகையில் ''பாதிக்கப்பட்ட 4 மற்றும் 10 வயது குழந்தைகள் உட்பட 15 பேர் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சோழவந்தான் ஊத்துக்குளி, முதலியார் கோட்டையைச் சேர்ந்த 8 பேர் உள்நோயாளியாக சிகிச்சையில் உள்ளனர்.
இருவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்'' என்றார்.