ADDED : ஜூலை 23, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார் : அலங்காநல்லுாரில் பேரூராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' மக்கள் குறை தீர்ப்பு முகாமை எம்.எல்.ஏ., வெங்கடேசன் துவக்கி வைத்தார். 18 வார்டுகளில் முதற்கட்டமாக 8 வார்டுகளுக்கு முகாம் நடத்தப்பட்டது.
தாசில்தார்கள் ராமச்சந்திரன், பார்த்திபன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மணிகண்டன், பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி முன்னிலை வகித்தனர்.செயல் அலுவலர் சிவக்குமார் வரவேற்றார். வார்டு கவுன்சிலர்கள், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், முத்தையன், அருண், அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன் பங்கேற்றனர். 443ல் 238 மனுக்கள் மகளிர் உரிமை தொகைக்காக பெறப்பட்டது.