/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொடக்க பள்ளிகளில் துாய்மை பணிகளுக்கு ரூ.2.43 கோடி
/
தொடக்க பள்ளிகளில் துாய்மை பணிகளுக்கு ரூ.2.43 கோடி
ADDED : ஜன 08, 2024 11:49 PM
மதுரை : தமிழகத்தில் அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகளில் துாய்மை பணிகள் செயல்பாட்டிற்காக கூடுதலாக ரூ.2 கோடி 40 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து அரசு தொடக்க கல்வித்துறையில் 'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இவற்றில் சிறப்பு செயல்பாடாக ஜன.,8 முதல் 10 வரை சிறப்பு துாய்மை பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக ஒரு பள்ளிக்கு தலா ரூ.1000 வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்பள்ளிகளில் செயல்படும் மன்றச் செயல்பாடுகளுக்காக ரூ.4.86 கோடி ஒதுக்கப்பட்டது.தற்போது துாய்மை பணிக்காக சிறப்பு நிதியாக 24,350 பள்ளிகளுக்கு ரூ.2.40கோடி ஒதுக்கி இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.