ADDED : ஆக 16, 2026 04:10 PM
மதுரை: ‘24 மனை தெலுங்குச் செட்டியின் 4 பிரிவுகளையும் ஒரே எம்.பி.சி., பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டும்’’ என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரையில் இச் சமூகப்பாதுகாப்பு சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் பால்பாண்டியன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார். பொருளாளர் மாரியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இடஒதுக்கீட்டில் 24 மனை தெலுங்கு செட்டி, சாது செட்டி, தெலுங்கு செட்டி, தெலுங்கு பட்டி செட்டி ஆகிய 4 பெயர்களையும், ‘தெலுங்குபட்டி செட்டி’ எனும் இச்சமூகம் இடம்பெற்றுள்ள எம்.பி.சி., எனும் ஒரே பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டும். தேசிய அளவில் தெலுங்க செட்டி சமூகத்தில் அமைச்சர், ஆட்சி மற்றும் காவல் பணிகளில் அதிகாரிகள், நீதிபதிகள், தேர்வாணைய அதிகாரிகள் என எவரும் அங்கம் வகிக்கவில்லை. இதுகுறித்து ஆட்சியாளர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றும், போராட்டம் நடத்தியும் பலனில்லை. எனவே இடஒதுக்கீட்டில் எம்.பி.சி., பிரிவில் இடம்பெறச் செய்ய வேண்டும். அமைப்புக்கு இளைஞரணி என்ற புதிய அமைப்பை துவக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.
