ADDED : ஆக 15, 2025 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: வாவிடமருதுாரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமை எம்.எல்.ஏ., வெங்கடேசன் துவக்கி வைத்தார். பி.டி.ஓ.,க்கள் வள்ளி, கலைச்செல்வி, தாசில்தார்கள் ராமச்சந்திரன், பார்த்திபன் முன்னிலை வகித்தனர்.
ஏ.பி.டி.ஓ., கண்ணன் வரவேற்றார். வாவிடமருதுார், அச்சம்பட்டி, பண்ணைகுடி, 15பி.மேட்டுப்பட்டி ஊராட்சி மக்களுக்கு முகாம் நடத்தப்பட்டது. தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், முத்தையன், மாவட்ட அணி நிர்வாகிகள் பிரதாப், பாண்டி, கார்த்திகேயன், சந்தனகருப்பு, தவ சதீஷ், ராகுல் பங்கேற்றனர். 451ல் 263 மனுக்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக பெறப்பட்டது.