/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு டவுன் பஸ் கவிழ்ந்து 29 பயணிகள் காயம்
/
அரசு டவுன் பஸ் கவிழ்ந்து 29 பயணிகள் காயம்
ADDED : டிச 23, 2024 05:24 AM

திருமங்கலம்: திருமங்கலம் அருகே ரோட்டோர பள்ளத்தில் அரசு டவுன் பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 29 பயணிகள் காயமடைந்தனர்.
திருமங்கலத்தில் இருந்து விருதுநகர் மாவட்டம் காரியாபட்டிக்கு கூடக்கோவில், கீழ உப்பிலி குண்டு வழியாக நேற்று மதியம் டவுன்பஸ் சென்றது.
திருமங்கலம் டிப்போவை சேர்ந்த டிரைவர் லிங்கம் 52, பஸ்சை ஓட்டிச் சென்றார்.
சவுடார்பட்டி சேர்ந்த கண்டக்டர் பாண்டி மற்றும் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் இருந்தனர். கூடக்கோவிலை கடந்து கொக்குளம் ரோட்டில் முனியாண்டி கோயில் அருகே பஸ் சென்றது.
அப்போது ஸ்டீயரிங் ராடு உடைந்ததால், பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து ஐந்து அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் வயல்வெளியில் விழுந்தது. டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட 29 பேர் காயமடைந்தனர்.
அவர்கள் விருதுநகர் மதுரை திருமங்கலம் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். கூடக்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

