/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முப்பது குழந்தைகளுக்கு மஞ்கள் காமாலை பாதிப்பு * குடிநீரில் கழிவுநீர் கலந்தது காரணமா
/
முப்பது குழந்தைகளுக்கு மஞ்கள் காமாலை பாதிப்பு * குடிநீரில் கழிவுநீர் கலந்தது காரணமா
முப்பது குழந்தைகளுக்கு மஞ்கள் காமாலை பாதிப்பு * குடிநீரில் கழிவுநீர் கலந்தது காரணமா
முப்பது குழந்தைகளுக்கு மஞ்கள் காமாலை பாதிப்பு * குடிநீரில் கழிவுநீர் கலந்தது காரணமா
ADDED : அக் 07, 2024 05:22 AM
பேரையூர்: பேரையூர் அருகே குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் மஞ்சகாமாலையால் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வருகின்றனர்.
பேரையூர் அருகே எஸ்.மேலப்பட்டி. இங்கு ஒரு மாதமாக வைகை கூட்டு குடிநீர் வராததால் ஆழ்துளைக் கிணறு மூலமாக ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்து வருகிறது. இதில் சாக்கடை கழிவு நீரும் கலந்து வருவதால் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலப்பட்டி சுந்தர் கூறியதாவது: குடிநீரில் கழிவு நீரும் கலந்து வருவதால் இங்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. எனது மகள் சிவ தர்ஷினி 4 வகுப்பு படிக்கிறார். இவருக்கு மஞ்சள் காமாலை உள்ளது. முதலில் காய்ச்சல் வந்தது. வயிற்று வலி, வாந்தி என இருந்தது. ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில் மஞ்சள் காமாலை உறுதியானது.
பேரையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோம். டி.கல்லுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பெயரளவில் முகாம் நடத்தி விட்டு சென்றதோடு சரி. சிகிச்சை அளிக்க யாரும் வரவில்லை. ஒன்று முதல் 12 வயது குழந்தைகள் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.
முனீஸ்வரன் என்பவர் கூறுகையில், ''எனது குழந்தை மீராவுக்கு 10, மஞ்சகாமாலை உறுதியானதையடுத்து ஐந்து நாட்களாக சிகிச்சை அளித்து வருகிறோம். இன்னும் சரியாகவில்லை. எங்கள் ஊரில் பெரும்பாலான குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை நோய் வந்துள்ளது. இதனால் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

