/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்து குளத்தில் 32 அடி உயர வேல்
/
குன்றத்து குளத்தில் 32 அடி உயர வேல்
ADDED : ஜூலை 09, 2025 08:13 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் லட்சுமி தீர்த்த குளம் (திருக்குளம்) மையப் பகுதியில் 32 அடி உயரத்தில் வேல் அமைக்கப்பட உள்ளதாக அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: லட்சுமி தீர்த்தகுளத்தில் 32 அடி உயரத்திற்கு வேல் அமைக்கப்பட உள்ளது. கரைப்பகுதி சுற்றிலும் வண்ண விளக்குகள் அமைத்து முருகப்பெருமான் பாடல்கள், கந்த சஷ்டி கவசம் ஒலிபரப்பப்பட உள்ளது. மலை மேல் தற்போதுள்ள 'ஓம்' மின்விளக்கு கோயிலில் முன்பகுதியில் மட்டுமே தெரிவதால், அதன் இடதுபுறத்தில் மிகப்பெரிய அளவில் 'வேலுடன்கூடிய ஓம் முருகா' மின்விளக்கு போர்டு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
கோயிலுக்குள் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளின் மூலவர்களையும் ஒரே இடத்தில் பக்தர்கள் தரிசிக்க தேக்கு மரத்தால் வடிவமைக்கப்பட்டு வருகிறது. மண்டலாபிஷேகத்திற்குள் இப்பணிகள் அனைத்தும் நிறைவடையும் என்றார்.