/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
341 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்: பெண் கைது
/
341 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்: பெண் கைது
ADDED : செப் 23, 2024 08:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் கீழஉரப்பனுாரைச் சேர்ந்த பிரவீன் 32, மனைவி வைத்தீஸ்வரி 28. பலசரக்கு கடை வைத்துள்ளனர்.
இவர்கள் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து திருமங்கலம் போலீசார் சோதனைக்காக சென்றனர். அப்போது மினி வேனில் இருந்து பிரவீன் குட்கா, புகையிலை பொருள்கள் இறக்கிக் கொண்டிருந்தார். போலீசை பார்த்தவுடன் தப்பி ஓடினார். வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் 341 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். கடையில் இருந்த வைத்தீஸ்வரியை கைது செய்தனர். பிரவீனை தேடுகின்றனர்.