/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'‛பிராமணர்களால்தான் ஹிந்து தர்மம் காக்கப்படுகிறது' மதுரையில் அர்ஜூன் சம்பத் பேச்சு
/
'‛பிராமணர்களால்தான் ஹிந்து தர்மம் காக்கப்படுகிறது' மதுரையில் அர்ஜூன் சம்பத் பேச்சு
'‛பிராமணர்களால்தான் ஹிந்து தர்மம் காக்கப்படுகிறது' மதுரையில் அர்ஜூன் சம்பத் பேச்சு
'‛பிராமணர்களால்தான் ஹிந்து தர்மம் காக்கப்படுகிறது' மதுரையில் அர்ஜூன் சம்பத் பேச்சு
ADDED : அக் 16, 2024 04:43 AM
மதுரை : பிராமணர்களால்தான் ஹிந்து தர்மம் காக்கப்படுகிறது என ஹிந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் பேசினார்.
மதுரை எஸ்.எஸ்.காலனி தாம்ப் ராஸ் கல்யாண மகாலில் பிராமண சமூகத்தினருக்கு எதிரான அநீதிகளைகண்டித்தும், பிராமணர்களுக்கு புதிய பாதுகாப்பு சட்டம் பிறப்பிக்க வலியுறுத்தியும் அனைத்து பிராமண சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் பிராமணர் சங்க மாவட்ட தலைவர் ஜெயஸ்ரீ தலைமையில் நடந்தது.
ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன் வரவேற்றார். பிராமண சங்க மாநில செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன், பா.ஜ., விவசாய அணி மாநில துணை தலைவர் சசிராமன், நிர்வாகிகள் ஸ்ரீராம்கண்ணன், ஸ்ரீகுமார், மகளிரணி நிர்வாகிகள்வனிதா, அன்னபூரணி உட்பட பலர் பங்கேற்றனர்.
அர்ஜூன் சம்பத் பேசியதாவது: தமிழகத்தில் பிராமண சமுதாயத்திற்கு எதிரான விமர்சனங்கள், நிகழ்வுகள்தொடர்ந்து நடக்கின்றன. இதற்கு எதிராக அனைத்து சமூகத்தினரும் ஒன்று திரள வேண்டும். எந்த சமூகத்தையும் இழிவு படுத்தும் செயலை கைவிட வேண்டும்.
ஹிந்து தர்மம் காக்கப்படுகிறது என்றால் அது பிராமணர் சமூகத்தால்தான். அதனால் பிராமணர் சமூகத்தை காக்க சத்திரியர்கள்தான் போராட வேண்டும். இச்சமூகத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான 10 சதவீதம் இடஒதுக்கீடுக்கு நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளிக்கின்றன. ஆனால் தமிழகத்தில் மட்டும்அக்கட்சி பிராமணர் எதிர்ப்பை கையில் எடுத்துள்ளது. ஆதிதிராவிடர் சமூக மக்களை பாதுகாக்க பி.சி.ஆர்.,சட்டம் உள்ளது போல், பிராமணர்களுக்கென பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். இதற்காக சென்னையில் நவ.3ல் நடக்கும் ஆர்ப்பாட்டம், கோட்டையை நோக்கி பேரணியில் அனைத்து சமூகத்தினரும் லட்சக் கணக்கில் பங்கேற்க வேண்டும் என்றார்.