/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மானியத்தில் கிடைக்கிறது ‛'பவர் டில்லர், பவர் வீடர்'
/
மானியத்தில் கிடைக்கிறது ‛'பவர் டில்லர், பவர் வீடர்'
மானியத்தில் கிடைக்கிறது ‛'பவர் டில்லர், பவர் வீடர்'
மானியத்தில் கிடைக்கிறது ‛'பவர் டில்லர், பவர் வீடர்'
ADDED : டிச 05, 2024 06:10 AM
மதுரை: வேளாண்மை பொறியியல் துறை சார்பில் விவசாயிகள் மானிய விலையில் 'பவர் டில்லர், பவர்வீடர்' கருவிகளை மானிய விலையில் வாங்கலாம்.
தமிழகத்தில் 4000 விவசாயிகளுக்கு 'பவர் டில்லர்', 4000 விவசாயிகளுக்கு 'பவர் வீடர்' கருவியை வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வழங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஒரே விவசாயி 'பவர் டில்லர், பவர் வீடர்' இரண்டும் வாங்க முடியும்.
'பவர் டில்லருக்கு' அதிகபட்சமாக ரூ.1.20 லட்சம், 'பவர் வீடருக்கு' ரூ.63 ஆயிரம் அல்லது கருவியின் மொத்த விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அது வழங்கப்படும்.
பொது பிரிவைச் சேர்ந்த குறு, சிறு, விவசாயிகள் 'பவர் வீடர்' வாங்க 10 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது. மானியத் தொகை இயந்திரங்களின் மொத்த விலைக்கு ஏற்ப மாறுபடும்.
விவரங்களுக்கு வேளாண் பொறியியல் துறையின் மதுரை உதவி செயற்பொறியாளர் (94439 27722), உசிலம்பட்டி உதவி செயற்பொறியாளரை ( 94436 77046) தொடர்பு கொள்ளலாம்.