நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர் : மதுரை திருநகர் நெல்லையப்பபுரம் விஜயகுமார் 26,க்கும் ஹார்விபட்டி வீரவேல் 23,க்கும் முன்விரோதம் இருந்தது. நேற்று ஹார்விப்பட்டி பகுதியில் விஜயகுமார் சென்றார்.
அப்போது விஜயகுமாரையும் அவரது மனைவியையும் வீரவேல் ஆபாசமாக பேசினார்.
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வீரவேலும் அவரது நண்பர்கள் வேல்முருகன், சத்தியமூர்த்தி, ராஜபாண்டி (சகோதரர்கள்) ஆகியோரும் விஜயகுமாரை ஆபாசமாக பேசி, தாக்கி மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து விஜயகுமார் திருநகர் போலீசில் புகார் செய்தார். வீரவேல், வேல்முருகன், சத்தியமூர்த்தி, ராஜபாண்டியை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.