/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பெண் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை
/
பெண் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை
பெண் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை
பெண் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை
ADDED : மார் 02, 2024 04:12 AM
மதுரை : மதுரையில் 2 பெண் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
மதுரை தெப்பக்குளம் பாபுநகரை சேர்ந்தவர் செந்தில்குமரன் 40. இவரது மனைவி வீரசெல்வி 36. சிறுவர் சீர்திருத்தப்பள்ளி ஆசிரியை.
இவர்களுக்கு எட்டாம் படித்த தனுஸ்ரீ, இரண்டாம் வகுப்பு படித்த மேகாஸ்ரீ ஆகிய குழந்தைகள் இருந்தனர்.
தம்பதிக்குள் குடும்பத்தகராறு இருந்தது. இந்நிலையில், சிலைமான் பகுதியில் உள்ள வைகையாற்று பாலத்திற்கு கீழே செந்தில்குமரன் நேற்று மதியம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசார் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதில் மனமுடைந்த வீரலட்சுமி ஒரு மின் விசிறியிலும், குழந்தைகள் இருவரும் மற்றொரு மின்விசிறியிலும் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
தகவல் அறிந்த தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகது இஸ்திரீஸ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

