/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தடையை மீறி ஆர்ப்பாட்டம் குன்றத்தில் 434 பேர் கைது மலைமீது ஆடு பலியிட தடையால்
/
தடையை மீறி ஆர்ப்பாட்டம் குன்றத்தில் 434 பேர் கைது மலைமீது ஆடு பலியிட தடையால்
தடையை மீறி ஆர்ப்பாட்டம் குன்றத்தில் 434 பேர் கைது மலைமீது ஆடு பலியிட தடையால்
தடையை மீறி ஆர்ப்பாட்டம் குன்றத்தில் 434 பேர் கைது மலைமீது ஆடு பலியிட தடையால்
ADDED : ஜன 06, 2025 01:30 AM
திருப்பரங்குன்றம், ; ராஜபாளையம் மைலம்பட்டியை சேர்ந்த சையது அபுதாஹிர் 53, சிலநாட்களுக்கு முன், குடும்பத்தினருடன் திருப்பரங்குன்றம் வந்தார். மலை மீதுள்ள தர்காவில் நேர்த்திக் கடனை செலுத்த ஒரு ஆடு,  இரண்டு சேவல்களைக் கொண்டு வந்தார். மலை அடிவாரத்தில் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், 'ஆடு,  சேவல்களை மலைமீது கொண்டு செல்ல அனுமதி இல்லை' என்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் 20க்கும் மேற்பட்டோர் மலைக்கு செல்லும் படிக்கட்டுகள் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் அதிகாரிகள், ஆர்.டி.ஒ., சமாதானம் செய்ததை அடுத்து கலைந்து சென்றனர்.
மலைமீதுள்ள தர்காவில் ஆடு, சேவல்களை பலியிட அனுமதிக்காத போலீஸ், ஆர்.டி.ஒ.,வை கண்டித்து நேற்று திருப்பரங்குன்றத்தில் எஸ்.டி.பி.ஐ., மற்றும் ஜமாத் நிர்வாகிகள் 400க்கும் மேற்பட்டோர் பெரிய ரதவீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
போலீஸ் துணை கமிஷனர்கள் வனிதா, ராஜேஸ்வரி, கூடுதல் துணை கமிஷனர் திருமலை குமார்,  உதவி கமிஷனர் சசிப்பிரியா,  கணேசன்,  இன்ஸ்பெக்டர்கள் மதுரை வீரன்,  துரைப்பாண்டி உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அனுமதி தராத போலீசாருடன் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள் உள்பட 434 பேரை போலீசார் கைது செய்து திருநகரில் தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்.

