/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சட்டவிரோதமாக பயோ டீசல் விற்ற 5 பேர் கைது
/
சட்டவிரோதமாக பயோ டீசல் விற்ற 5 பேர் கைது
ADDED : நவ 24, 2024 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி., இனிக்கோ திவ்யன் உத்தரவுபடி டி.எஸ்.பி., செந்தில் இளந்திரையன், எஸ்.ஐ., சிவப்பிரகாசம் மேலுார், சாலைக்கிபட்டியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கு நின்றிருந்த இரண்டு டேங்கர் லாரி, ஒரு வேனை சோதனையிட்டனர். அதில் ரூ.36 லட்சம் மதிப்பு உடைய 38 ஆயிரத்து 400 லிட்டர் கடத்தல் பயோ டீசல் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கோவை நந்தகுமார் 40, மேலுார் பாஸ்கர் 42, சேக்தாவூத் 45, முகமது இப்ராஹிம் 47, சிவகங்கை வினோத் குமார் 39, ஆகியோரை கைது செய்தனர். சாலைக்கிபட்டி மற்றும் அய்யாபட்டி விலக்கில் சட்டவிரோதமாக பயோ டீசல் விற்ற இடங்களுக்கு 'சீல்' வைத்தனர்.