/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை உழவர் சந்தைகளால் 5 லட்சம் விவசாயிகள் பயன்
/
மதுரை உழவர் சந்தைகளால் 5 லட்சம் விவசாயிகள் பயன்
ADDED : மே 30, 2025 03:58 AM
மதுரை: வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் நான்காண்டுகளில் மதுரையில் உள்ள 7 உழவர் சந்தைகள் மூலம் 5 லட்சத்து16 ஆயிரத்து 892 விவசாயிகளால் ரூ.568. 48 கோடி மதிப்பிலான 1.36லட்சம் டன் காய்கறிகள் விற்கப்பட்டுள்ளது.
துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி கூறியதாவது:
நான்காண்டுகளில் உழவர் சந்தை மூலம் நேரடியாக 2.34 கோடி நுகர்வோர் பயன்பெற்றுள்ளனர். அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் மதுரையில் 5 கிராமங்களில் ரூ.52.5 கோடி மதிப்பில் 5 உலர் களங்களும், 13 கிராமங்களில் ரூ.442 கோடி மதிப்பில் 13 உலர் களங்களுடன் தரம்பிரிப்பு கூடங்கள் விவசாயிகளுக்காக கட்டப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சிறுதானிய இயக்க திட்டத்தின் கீழ் இரண்டு சிறுதானிய முதன்மை பதப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் வணிக செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் 3 நிறுவனங்களுக்கு ரூ1.50 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை விற்பனைக்குழுவின் மூலம் 510 விவசாயிகளுக்கு ரூ.10.38 கோடி அளவுக்கு வேளாண் விளைபொருட்கள் மீதான பொருளீட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் மூலம் 5579 விவசாயிகளின் 13 ஆயிரத்து 193 டன் வேளாண் விளைபொருட்கள் ரூ.22.75 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
மதுரை முக்கம்பட்டியில் 10 ஏக்கரில் ரூ.32.06 கோடி மதிப்பீட்டில் வேளாண் விளைபொருள் பதப்படுத்தும் தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 500 டன் கொள்ளளவுள்ள 10 குளிர்பதன கிட்டங்கிகள், 2000 டன் கொள்ளளவுள்ள 3 சேமிப்புக்கிட்டங்கிகள், 2 டன் கொள்ளளவுள்ள காய்கறி சிப்பமிடும் அறை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.