/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நோய்க்கிருமிகளால் 5 லட்சம் பேர் இறப்பு
/
நோய்க்கிருமிகளால் 5 லட்சம் பேர் இறப்பு
ADDED : பிப் 16, 2025 05:34 AM
மதுரை : மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தொற்று நோய்கள் குறித்த கருத்தரங்கு நடந்தது.
இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மாநில கிளைத் தலைவராக தேர்வான டாக்டர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார். நோயறிதலுக்கான மேற்பார்வை பொறுப்பு, நிமோனியா (சளிக்காய்ச்சல் மேலாண்மை), சரும மற்றும் நீரிழிவு காய தொற்றுகள், சிறுநீர்ப்பாதை தொற்றுகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மறுப்பை சமாளிக்கும் சிறப்பான உத்திகள் குறித்து பேசினர். ஒவ்வொரு ஆண்டும் மருந்து எதிர்ப்புத்திறன் கொண்ட நோய்க்கிருமிகளின் காரணமாக இந்தியாவில் 5 லட்சம் பேர் இறப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவ இயக்குநர் ரமேஷ் அர்த்தனாரி, மருத்துவ நிர்வாக அதிகாரி கண்ணன் கருத்தரங்க அமர்வுகளில் பேசினர். இதய மயக்க மருந்தியல் துறைத் தலைவர் குமார், தொற்று நோய்களுக்கான இணை மருத்துவ நிபுணர் மாலதி, தொற்று நோய்கள் துறை பதிவாளர் அபிநயா ஏற்பாடுகளை செய்தனர்.

