/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காபியில் போதை; பெண் உட்பட 5 பேர் கைது
/
காபியில் போதை; பெண் உட்பட 5 பேர் கைது
ADDED : நவ 02, 2025 03:48 AM
மும்பை: கொழும்புவில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.47 கோடி மதிப்பிலான கோகைன் போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்த விமானப் பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டன. அதில், பெண் ஒருவர் கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்ததில் 9 காபி பாக்கெட்டுகளில் கோகைன் கடத்தி வந்தது தெரிய வந்தது.
4.7 கிலோ எடை கொண்ட இந்த கோகைனின் மதிப்பு ரூ.47 கோடியாகும். போதைப் பொருளை எடுத்து வந்த பெண் பயணி, இவரை அழைத்துச் செல்ல விமான நிலையம் வந்த நபர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

