/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சார் பதிவாளர் அலுவலக மாடியில் மரங்கள்
/
சார் பதிவாளர் அலுவலக மாடியில் மரங்கள்
ADDED : நவ 02, 2025 03:49 AM

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் சார் பதிவாளர் அலுவலக கட்டட மாடியில் மரங்கள் வளர்ந்து வருகின்றன. இங்குள்ள வாடிவாசல் சந்தை மேடு பகுதியில் கட்டப்பட்ட சார் பதிவாளர் அலுவலகம் கடந்த 2015 முதல் செயல்படுகிறது. இக்கட்டடத்தை முறையாக பராமரிக்காததால் கட்டட மாடியில் அரசமரம் உள்ளிட்ட செடிகள் வளர்ந்துள்ளன.
இந்த அலுவலக தண்ணீர் தேவைக்கு மாடியின் பின்பக்கத்தில் அருகருகே இரண்டு தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் ஈரப்பதத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால் கட்டடத்தின் வெளிப்பகுதி விரிசல் விட துவங்கியுள்ளது.
மாடியின் முன்பக்கத்திலும் மரங்கள் வளர்ந்துள்ளன. மழைநீர் சேகரிப்பு குழாய்கள் பகுதிகளிலும் கட்டடம் பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளது. மாடியில் வளர்ந்து கட்டடத்தை வலுவிழக்க செய்யும் மரங்களை வேருடன் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

