/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கிராமங்களில் 5216 தெரு விளக்குகள்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
/
கிராமங்களில் 5216 தெரு விளக்குகள்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
கிராமங்களில் 5216 தெரு விளக்குகள்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
கிராமங்களில் 5216 தெரு விளக்குகள்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
ADDED : ஜூலை 30, 2025 06:48 AM
மதுரை; மதுரை மாவட்டத்தின் 420 கிராமங்களிலும் தெருவிளக்குகளை ஒளிர்வதற்கு மாவட்ட நிர்வாகம் சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டு 5216 தெருவிளக்குகளை பொருத்தியுள்ளது.
குற்றங்கள், விபத்தை தடுக்க மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த மாநில உள்ளாட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. மதுரையில் கலெக்டர் பிரவீன்குமார், கூடுதல் கலெக்டர் வானதி ஆகியோர் ஊராட்சி உதவி இயக்குனர் அரவிந்த் ஏற்பாட்டில் எல்.இ.டி., தெருவிளக்குகள் பொருத்த உத்தரவிட்டனர். மாவட்டத்தின் 420 ஊராட்சிகளிலும் மொத்தம் 87 ஆயிரத்து 464 தெருவிளக்குகள் உள்ளன. இவற்றில் எரியாத விளக்குகள் மற்றும் விளக்குகள் தேவையான இடங்கள் குறித்து சிறப்பு கணக்கெடுக்கப்பட்டது.
மக்கள் நலப்பணியாளர்கள், ஊராட்சி செயலர்கள், ஏ.பி.டி.ஓ.,க்கள் களமிறக்கப்பட்டனர். அவர்கள் ஒவ்வொரு புதன்கிழமையும் மாலை தெருவிளக்குகள் குறித்து ஆய்வு செய்தனர். இதில் 3400 விளக்குகள் எரியவில்லை, 1816 இடங்களில் புதிதாக விளக்குகள் தேவை என்றும் தெரிவித்தனர். இந்த புதிய இடங்கள் என்பவை ரோடு சந்திப்பு, வணிக நிறுவனங்கள், பிரதான ரோட்டில் கிராம ரோடுகள் பிரியும் பகுதிகள், இருட்டான பகுதிகள் அடிப்படையாக கொண்டவை. தேவையான இடங்களில் புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு விளக்குகள் பொருத்தப்பட்டன. மொத்தம் 5216 விளக்குகளை எரியவிட்டுள்ளனர். தற்போது ஒளிவெள்ளம் பாய்வதால் கிராமங்கள் 'பளிச்'சென ஒளிர்கின்றன.

