ADDED : ஜூன் 13, 2025 02:52 AM
மதுரை: மதுரை மாநகராட்சி மேற்கு சட்டசபை தொகுதியில் 53 இடங்களில் புதிய தார் ரோடு பணிகளை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.
சோலையழகுபுரம், ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் நடந்த பூமி பூஜையில் கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி, கமிஷனர் சித்ரா பங்கேற்றனர். மொத்தம் 53 இடங்களில் ரூ.65.53 கோடி மதிப்பீட்டில் 718 கி.மீ., ரோடு பணிகள் ஒரே நாளில் துவக்கி வைக்கப்பட்டன. விராட்டிபத்தில் 67 வது வார்டு கவுன்சிலர் அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார். 74 வது வார்டு பசும்பொன் நகரில் புதிதாக அமைத்த ரோட்டை மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார்.
கோச்சடையில் துாய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.9.74 கோடி மதிப்பீட்டில் தினமும் 200 டன் திறன் கொண்ட நவீன குப்பை பரிமாற்ற நிலைய கட்டுமான பணிக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார். துணை மேயர் நாகராஜன், பி.ஆர்.ஓ.,க்கள் சாலி தளபதி, மகேஸ்வரன், கவுன்சிலர் லட்சிகாஸ்ரீ பங்கேற்றனர்.