ADDED : ஏப் 16, 2025 09:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை,: திண்டுக்கல் மாவட்டம் மருதாணிகுளம் முத்திருள், சுரேஷ்குமார், தேவயானி, அஜய்கண்ணன், செந்தில். இவர்களிடம் 2022ல் 37 கிலோ கஞ்சாவை திண்டுக்கல் டவுன் மேற்கு போலீசார் பறிமுதல் செய்தனர். போதைப்பொருள் தடுப்பு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடந்தது.
செந்திலுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.70 ஆயிரம் அபராதம், மற்ற 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் உத்தரவிட்டார். துாத்துக்குடி அசோக் உட்பட சிலரிடம் 2018 ல் 8.40 கிலோ கிராம் கஞ்சா ஆயில், 9.140 கிலோ கிராம் சரஸ் போதைப்பொருளை துாத்துக்குடி போதைப்பொருள் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். அசோக்கிற்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் உத்தரவிட்டார்.