ADDED : ஆக 14, 2025 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் இஸ்கான் அமைப்பு சார்பில் ஆக.16, 17 ல் ஆறு திருத்தலங்களை ஒரே இடத்தில் தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பத்ரிகாஷ்ரமம் பத்ரிநாராயணன், துவாரகை கிருஷ்ணர், அயோத்தி ராமர், பண்டரிபுரம் விட்டல் ருக்மணி, உடுப்பி கிருஷ்ணர், குருவாயூரப்பன் கிருஷ்ணர் ஆகிய 6 தலங்களும் காட்சிப்படுத்தப்படும்.
மதுரை யாதவா ஆண்கள் கல்லுாரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், இதற்கான பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் காலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை தரிசனம் செய்யலாம்.

