/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிறுமியருக்கு தொல்லை 61 வயது டெய்லருக்கு கம்பி
/
சிறுமியருக்கு தொல்லை 61 வயது டெய்லருக்கு கம்பி
ADDED : ஏப் 24, 2025 02:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:மதுரை, எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத்கான், 61; டெய்லர். இவரது நண்பரான சக டெய்லர் வீட்டிற்கு அடிக்கடி செல்வார். இரு நாட்களுக்கு முன் அப்துல் மஜீத்கான், நண்பரின் குடும்பத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமியை பூங்காவிற்கு விளையாட அழைத்துச் சென்றார். அங்கு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். அதேபோல், அங்கு விளையாடிய மற்றொரு, 10 வயது சிறுமிக்கும் தொந்தரவு கொடுத்தார்.
இதுகுறித்து, வீடு திரும்பியதும் பெற்றோரிடம் சிறுமியர் கூறினர். போலீசாருக்கு பெற்றோர் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, தெற்கு மகளிர் போலீசார் 'போக்சோ' வழக்கில் அப்துல் மஜீத்கானை கைது செய்தனர்.

