/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தனியார் நிறுவனங்களுக்கு 70 சதவீத காஸ் சிலிண்டர் விநியோகம் 'கட்' விலையையும் ரூ.114 உயர்த்தியதால் ஓட்டல், சிறுதொழில்கள் ஸ்தம்பிப்பு
/
தனியார் நிறுவனங்களுக்கு 70 சதவீத காஸ் சிலிண்டர் விநியோகம் 'கட்' விலையையும் ரூ.114 உயர்த்தியதால் ஓட்டல், சிறுதொழில்கள் ஸ்தம்பிப்பு
தனியார் நிறுவனங்களுக்கு 70 சதவீத காஸ் சிலிண்டர் விநியோகம் 'கட்' விலையையும் ரூ.114 உயர்த்தியதால் ஓட்டல், சிறுதொழில்கள் ஸ்தம்பிப்பு
தனியார் நிறுவனங்களுக்கு 70 சதவீத காஸ் சிலிண்டர் விநியோகம் 'கட்' விலையையும் ரூ.114 உயர்த்தியதால் ஓட்டல், சிறுதொழில்கள் ஸ்தம்பிப்பு
ADDED : மார் 08, 2026 05:11 AM
மதுரை: தனியார் நிறுவனங்களுக்கு வழங்கவேண்டிய வணிகப்பயன்பாட்டு காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை திடீரென 60 முதல் 70 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விலையை ரூ.114 உயர்த்தியுள்ளதால் ஓட்டல்கள், சிறுதொழில்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
சிலிண்டர்களின் எண்ணிக்கை திடீரென குறைக்கப்பட்டது குறித்து காஸ் சிலிண்டர் விநியோகஸ்தர்கள் கூறியதாவது:
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு இடையிலான போர் இப்போது தான் தொடங்கியது. அதற்கு முன்பாகவே இந்தியாவில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது. காஸ் சிலிண்டர்களை அதிகமாக வாங்கும் நிறுவனங்களுக்கு ஏற்ப சலுகைகளில் வேறுபாடு காட்டி வழங்குகிறது காஸ் நிறுவனங்கள்.
தனியார் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய வணிகப்பயன்பாட்டு சிலிண்டர்களின் எண்ணிகை 60 முதல் 70 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஓட்டல்கள், சிறு உணவங்கள், சிறுதொழில்களுக்கு சப்ளை செய்வதில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த தட்டுப்பாட்டுக்கு சம்பந்தமில்லாமல் மத்திய அரசு, வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலையை அதிகரித்துள்ளது. விலை உயர்வு தான் இப்போதைய பிரச்னை. 19 கிலோ எ டையுள்ள சிலிண்டரின் விலை ரூ.1909 ஆக இருந்தது. இப்போது ரூ.114 வரை அதிகரித்துள்ளது.
சலுகையில் வேறுபாடு விலை நிர்ணயம் என்பது சிலிண்டர்கள் அதிகமாக எடுப்பதைப் பொறுத்து மாறக்கூடாது. எல்லோரும் தான் தொழில் செய்கின்றனர்.
தனியார் நிறுவனங்கள் 1000 சிலிண்டர்கள் எடுத்தால் அதற்கேற்ப தள்ளுபடி, 5000 சிலிண்டர் எடுத்தால் கூடுதல் தள்ளுபடி என பாகுபாடு காட்டப்படுகிறது. கூடுதல் சிலிண்டர் வாங்க முடியாத விநியோகஸ்தர்களின் வாடிக்கையாளர்களை அதிக சிலிண்டர் எடுக்கும் நிறுவனங்கள் கைப்பற்றுகின்றன.
காஸ் விநியோகஸ்தருக்கான நிரந்தர தள்ளுபடி நிறுத்தப்பட்டது. அதிக எண்ணிக்கையில் சிலிண்டர் எடுக்கும் நிறுவனங்களுக்கு கூடுதலாக ரூ.80 முதல் ரூ.100 வரை காஸ் நிறுவனங்கள் தள்ளுபடி தருகிறது. அந்த நிறுவனங்கள் ஓட்டல்கள், சிறுதொழில்களுக்கு எம்.ஆர்.பி. விலையை விட ரூ.50 முதல் ரூ.80 வரை குறைத்துத் தரும் போது சிறு நிறுவன வாடிக்கையாளர்கள் கைமாறுகின்றனர்.
கேட்டால் நீங்களும் கூடுதல் சிலிண்டர்களை மொத்தமாக டெபாசிட் செய்து வாங்கி தள்ளுபடி பெற வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர்.
மொத்தத்தில் நிரந்தர தள்ளுபடியை நிறுத்தி வைத்து, சிலிண்டர் விலையை உயர்த்தி எரிபொருள் பயன்பாட்டை ஸ்தம்பிக்க வைத்துள்ளது மத்திய அரசு என்றனர்.
வணிகப்பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு குறித்து தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க துணைத்தலைவர் குமார் கூறியதாவது:
மூன்று நாட்களுக்கு முன் வரை 19 கிலோ சிலிண்டரின் எம்.ஆர்.பி., விலை ரூ.1909 ஆக இருந்தது. இப்போது ரூ.114 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. நாங்களும் ஒரே நாளில் உணவுகளின் விலையை அதிகரிக்க முடியுமா. மார்ச் 9 முதல் ஓட்டல்கள், சிறு தொழில்களுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களின் அளவை குறைக்கப்போவதாக மறைமுகமாக எச்சரிக்கின்றனர்.
விறகு சமையலுக்கான சாத்தியக்கூறு இல்லை. மின் அடுப்பில் சமையல் செய்வதும் சாத்தியமில்லை. எனவே உணவகங்களுக்கு தடையின்றி சிலிண்டர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் சிறு, பெரிய ஓட்டல்கள் 10ஆயிரத்திற்கு மேல் உள்ளன. இதை நம்பி ஒருலட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களின் வேலைவாய்ப்பும் கேள்விக்குறியாகி விடும். அனைத்து ஓட்டல்களும் பாதிக்கப்படும் என்றார்.

