தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் ஊக்கத் தொகை  மதுரை ஆவின் அசத்தல்

 பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் ஊக்கத் தொகை  மதுரை ஆவின் அசத்தல்

 பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் ஊக்கத் தொகை  மதுரை ஆவின் அசத்தல்


ADDED : மார் 08, 2026 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 04:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் ஆவின் சார்பில் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ஊக்கத் தொகையுடன் கூடுதலாக ரூ.3 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியாளர்கள் நலன் கருதியும், பால் கொள்முதலை ஊக்குவிக்கும் வகையிலும் அரசு சார்பில் 2023 முதல் லிட்டருக்கு ரூ.3 ஊக்கத் தொகை வழங்கி வருகிறது. மதுரையில் வருவாயை கருத்தில் கொண்டு வழக்கமான அரசு ஊக்கத் தொகையுடன் கூடுதலாக ஒரு ரூபாய் வழங்கியது.

தற்போது மாடுகளுக்கு பால் வற்றும் காலம் துவங்கிவிட்டதால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மதுரை ஆவின் லாபத்தில் இருந்து வழங்கிய ரூ. 1 ஊக்கத் தொகையை ரூ.3 ஆக உயர்த்தி வழங்க அமைச்சர் மனோதங்கராஜ், இயக்குநர் ஜான் லுாயிஸ் உத்தரவிட்டனர்.

இதன் மூலம் ஒரு லிட்டர் பால் தற்போது ரூ.35 க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

அரசு ஊக்கத் தொகை ரூ.3, ஆவின் ஊக்கத் தொகை ரூ.3 சேர்த்து மதுரையில் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ. 46 ஆவின் வழங்குகிறது.

பொறுப்பேற்பு மதுரை ஆவின் பொது மேலாளராக (ஜி.எம்.,) வீராச்சாமி நேற்று பொறுப்பேற்றார். அவர் கூறுகையில், மதுரையில் உள்ள 623 சங்கங்களின் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களுக்கு பால் வற்றுங் காலமான மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு 3 சதவீதம் கூடுதல் ஊக்கத் தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக பால் உற்பத்தி செய்து ஆவினுக்கு வழங்க வேண்டும் என்றார்.

ஜி.எம்.,க்கு பாராட்டு

ஆவின் ஊழியர்கள் கூறியதாவது: மதுரை ஆவின் நஷ்டத்தில் இயங்கிய போது பொது மேலாளராக சிவகாமி பொறுப்பேற்றார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளால் நிறுவனம் லாபத்திற்கு மாறியது. சில நாட்களுக்கு முன் அவர் துாத்துக்குடிக்கு நில எடுப்பு டி.ஆர்.ஓ.,வாக மாற்றப்பட்டார். அவருக்கு பதில் வீராச்சாமி புதிய பொது மேலாளராக நேற்று பொறுப்பேற்றுள்ளார் என்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us