/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'பிளான் அப்ரூவலுக்கு' காத்திருக்கும் 7 ஆயிரம் தொழிற்சாலை கட்டடங்கள்
/
'பிளான் அப்ரூவலுக்கு' காத்திருக்கும் 7 ஆயிரம் தொழிற்சாலை கட்டடங்கள்
'பிளான் அப்ரூவலுக்கு' காத்திருக்கும் 7 ஆயிரம் தொழிற்சாலை கட்டடங்கள்
'பிளான் அப்ரூவலுக்கு' காத்திருக்கும் 7 ஆயிரம் தொழிற்சாலை கட்டடங்கள்
ADDED : ஏப் 11, 2025 05:47 AM
மதுரை: மதுரையில் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு 'பிளான் அப்ரூவலுக்காக' காத்திருக்கும் (500 சதுரமீட்டருக்குள்) தொழிற்சாலை கட்டடங்களுக்கும் வீட்டுவசதித்துறையின் புதிய அறிவிப்பின்படி சுயசான்று கையொப்பம் இட்டு விண்ணப்பிப்பதை விரிவுபடுத்த வேண்டும் என தொழிற்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர்.
குடிசைத்தொழில் மற்றும் பசுமை வகை தொழிற்சாலை கட்டடங்களுக்கு உடனடி அனுமதி பெறும் சுயசான்றிதழ் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானிய கோரிக்கையின் போது தெரிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் சிறிய தொழில்முனைவோர்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்து சுயசான்றிதழ் மூலம் 500 சதுரமீட்டருக்குள் கட்டப்படும் தொழிற்சாலை கட்டடங்களுக்கு உடனடியாக அனுமதி பெற வசதி செய்யப்படும்.
மேலும் கிராம பஞ்சாயத்து பகுதிகளில் அமையும் சிறிய தொழிற்சாலை கட்டடங்களுக்கு தேவைப்படும் குறைந்தபட்ச அணுகு பாதையின் அகலம் 7 மீட்டரில் இருந்து 6 மீட்டராக குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதை மதுரை மடீட்சியா சார்பில் வரவேற்கிறோம். அதேநேரத்தில் ஏற்கனவே தொழில்செய்து வருவோர் 'பிளான் அப்ரூவல்' பெறமுடியாமல் நிறைய கட்டடங்கள் உள்ளன. அதற்கான அனுமதியையும் உறுதிப்படுத்த வேண்டும் என சங்கத்தலைவர் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: குடியிருப்புகளுக்கு அருகில் டெய்லரிங் யூனிட் போன்ற சிறிய தொழில்கள் குடியிருப்புகளை பாதிக்காதவாறு செயல்பட்டால் அவற்றுக்கு 'வொய்ட் சான்றிதழ்', விவசாயம் சார்ந்த மாவு மில் போன்ற தொழில்களுக்கு 'கிரீன்' சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இத்தொழில்களை நகர்ப்புறத்திலும் செயல்படுத்தலாம் என்றுள்ளது.
உள்ளூர் திட்டக் குழுமத்தின் அனுமதி கிடைக்காத நிலையில் மதுரையில் 7000 குடிசைத்தொழில்களுக்கான கட்டடங்கள் 'பிளான் அப்ரூவலுக்காக' காத்திருக்கின்றன.
இந்த கட்டடங்களை காட்டி வங்கிக்கடனும் பெறமுடியவில்லை. ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட இந்த கட்டடங்களுக்கும் 500 சதுரமீட்டர் கட்டடத்திற்கு சுயச்சான்று கையெழுத்திட்ட விண்ணப்பமே போதுமானது என்ற அறிவிப்பை செயல்படுத்த வேண்டும் என்றார்.