ADDED : ஆக 23, 2025 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : மதுரை மேற்கு ஒன்றியம் சமயநல்லுார் ஊராட்சியில் தேனுார், தோடனேரி, ஊராட்சிகளுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்ட முகம் நடந்தது. வெங்கடேசன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
வடக்கு தாசில்தார் (பொறுப்பு) நவநீதகிருஷ்ணன், ஒன்றிய பி.டி.ஓ., பொற்செல்வி, ஏ.பி.டி.ஓ., லதா, தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் தனசேகரன் முன்னிலை வகித்தனர்.
ஆர்.ஐ., பாலகண்ணன் வரவேற்றார். ஊராட்சி செயலாளர்கள் மனோஜ், விவேகானந்தன், ஸ்ரீதர் பங்கேற்றனர். வருவாய்த்துறைக்கு 890, இதர துறைகளுக்கு 172, கலைஞர் உரிமை தொகை பெற 703 உட்பட மொத்தம் 1765 மனுக்கள் பெறப்பட்டன.