sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தொழிலாளர் நலவாரியத்தில் புதிதாக 79,977 பேர் பதிவு அமைச்சர் தகவல்

/

தொழிலாளர் நலவாரியத்தில் புதிதாக 79,977 பேர் பதிவு அமைச்சர் தகவல்

தொழிலாளர் நலவாரியத்தில் புதிதாக 79,977 பேர் பதிவு அமைச்சர் தகவல்

தொழிலாளர் நலவாரியத்தில் புதிதாக 79,977 பேர் பதிவு அமைச்சர் தகவல்


ADDED : மார் 30, 2025 03:26 AM

Google News

ADDED : மார் 30, 2025 03:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையில் கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் சங்கீதா தலைமை வகித்தார். மாவட்ட தொழிலாளர் இணை கமிஷனர் சுப்பிரமணியன் வரவேற்றார்.

அமைச்சர் கணேசன், 1221 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 57 லட்சத்து 17 ஆயிரத்து 300 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளைவழங்கி பேசுகையில், ''கடந்த 4 ஆண்டுகளில் தொழிலாளர்நல வாரியங்களில் மொத்தம்20 லட்சத்து 26 ஆயிரத்து 34 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

27 லட்சத்து 89 ஆயிரத்து 541பயனாளிகள் உள்ளனர்.ரூ. 2 ஆயிரத்து 349 கோடியே 17 லட்சத்து 40 ஆயிரத்து 29 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்தில் மட்டும் 79 ஆயிரத்து 977 பேர் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 234பயனாளிகள் உள்ளனர்.ரூ.108 கோடியே 7 லட்சத்து 67 ஆயிரத்து 177 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்வழங்கப்பட்டுள்ளன'' என்றார்.

தொழிலாளர் உதவி கமிஷனர் பாரி நன்றி கூறினார். அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் பொன்குமார், பூமிநாதன் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us