/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போதைப்பொருள் கடத்தல் 8 பேருக்கு தண்டனை
/
போதைப்பொருள் கடத்தல் 8 பேருக்கு தண்டனை
ADDED : டிச 04, 2024 08:40 AM
மதுரை : இலங்கைக்கு படகில் கடத்தப்படவிருந்த 9.985 கிலோகிராம் (கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன்) போதைப் பொருளை துாத்துக்குடி மாவட்டம் வேம்பார் கடற்கரையோரம் 2022ல் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
துாத்துக்குடி கீழ வைப்பார் இருதயவாசு45, கிங்பன் 27, சிலுவை 46, அஸ்வின் 28, சுபாஷ் 28, கபிலன் 24, சைமன் 31, ராமநாதபுரம் தங்கச்சிமடம் வினிஸ்டன் 27, மீது வழக்குப் பதிந்தனர்.
போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச்செல்வன்: இருதயவாசு உள்ளிட்ட 8 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ஒதலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.