நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு டி.வைரவன். இவர் உட்பட சிலர் கார், டூவீலர்களில் 36.200 கிலோ கஞ்சா கடத்தியதாக தாடிக்கொம்பு போலீசார் 2022 ல் வழக்கு பதிந்தனர்.
போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. டி.வைரவன், கோவிந்தபுரம் முத்துக்கருப்பன், தெத்துப்பட்டி சுந்தரபாண்டி, நவீனா, தேனி தும்மக்குண்டு அர்ஜூனன், ஆந்திரா ஜலபக லோகேஸ்வரா பிரசாத்திற்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம், திண்டுக்கல் ஷேக் பரீத், வத்தலக்குண்டு ஷேக் முகமது ரபீக், தேனி அல்லிநகரம் திவ்யாவிற்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.