நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பைபாஸ் ரோடு ராம்ஸ் அபார்ட்மென்ட்டைச் சேர்ந்தவர் சக்திவேல்.
வங்கி மேலாளர். இவரது மனைவி லட்சிகா நேற்றுமுன்தினம் இரவு 8:45 மணிக்கு பைபாஸ் ரோடு வாரச்சந்தையில் காய்கறிகளை வாங்கிக்கொண்டு சர்வீஸ் ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகில் நடந்து வந்தார். அப்போது பின்னால் டூவீலரில் வந்த 25 வயது மதிக்கத்தக்க 2 பேரில், பின்னால் இருந்த நபர் லட்சிகாவின் 9 பவுன் நகையை பறித்துக்கொண்டு கூட்டாளியுடன் தப்பினார். எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.

