/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரூ.1,000 லஞ்சம் வாங்கியவருக்கு 9 ஆண்டு சிறை
/
ரூ.1,000 லஞ்சம் வாங்கியவருக்கு 9 ஆண்டு சிறை
ADDED : மார் 01, 2024 01:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:மதுரை மாவட்டம், பனையூர் ஊராட்சித் தலைவராக இருந்தவர் மாயாண்டி. இவர், 2014ல் தெரு விளக்குகள் அமைக்க மதிப்பீடு தயாரிக்க, பனையூர் மின் வாரிய உதவி பொறியாளராக இருந்த ராமமூர்த்தியிடம் விண்ணப்பித்தார்.
இதற்காக, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய ராமமூர்த்தி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடிபட்டார்.
ராமமூர்த்திக்கு ஒன்பது ஆண்டுகள் சிறை தண்டனை, 1,500 ரூபாய் அபராதம் விதித்து, லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரதிராஜா உத்தரவிட்டார்.

