/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜல்லிக்கட்டு அரங்கத்தில் காளைகளுடன் மல்லுக்கட்டு; 936 காளைகள், 375 வீரர்கள் பங்கேற்பு

ADDED : பிப் 12, 2025 04:25 AM

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் அருகே கீழக்கரை கலைஞர் நுாற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் வடக்கு மாவட்ட கிழக்கு சட்டசபை தொகுதி தி.மு.க., சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.
நேற்று காலை 7:00 மணிக்கு அமைச்சர் மூர்த்தி எம்.எல்.ஏ., வெங்கடேசன், டி.ஆர்.ஓ., சக்திவேல், ஆர்.டி.ஓ., ஷாலினி போட்டியை துவக்கி வைத்தனர்.கலெக்டர் சங்கீதா போட்டியை பார்வையிட்டார். காளைகள், வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். எஸ்.பி., அரவிந்த் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கிழக்கு தொகுதிக்குட்பட்ட 936 காளைகள் களம் கண்டன. அதனை அடக்க 375 வீரர்கள் விளையாடினர். காயமடைந்த 36ல் 10 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வெற்றி பெற்ற காளைக்கும், வீரருக்கும் தங்க காசு, சைக்கிள், மிக்சி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இன்று (பிப்.12) கிழக்கு தொகுதி 2ம் நாள் போட்டியும், 16ல் சோழவந்தான் தொகுதி காளைகள் பங்கேற்கும் போட்டியும் நடக்கிறது.