ADDED : ஆக 01, 2026 02:56 AM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: அய்யங்கோட்டை ஆதிதிராவிடர் காலனி பொது மந்தையில் பல ஆண்டுகளாக வி.சி.க., கொடி கம்பம் இருந்தது.
அதனருகே புதிய தமிழகம் கட்சிக் கொடி கம்பம் அமைக்க வி.சி.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி பொது இடங்களில் இருந்த கட்சிக் கொடி கம்பங்களை அகற்ற வருவாய்த்துறையினர் முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வி.சி.க.,வினர், அப்பகுதி மக்கள் அதிகாரிகளை மறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார், கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கொடி கம்பம் அகற்றப்பட்டது. எதிர்த்த வி.சி.க.,வை சேர்ந்த 94 பேர் கைது செய்யப்பட்டனர்.
