sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

9718 மாணவருக்கு உதவித்தொகை

/

9718 மாணவருக்கு உதவித்தொகை

9718 மாணவருக்கு உதவித்தொகை

9718 மாணவருக்கு உதவித்தொகை


ADDED : செப் 27, 2024 06:51 AM

Google News

ADDED : செப் 27, 2024 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தமிழகத்தில் பெண்கள் கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற்றம், சுதந்திரம் பெற வேண்டும் என்பதற்காக புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதேபோல அரசு பள்ளி மாணவர்களில் உயர்கல்வி செல்வோரை அதிகரிக்க தவப்புதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் மதுரை மாவட்டத்தில் 6 - 12 வரை பயிலும் 9 ஆயிரத்து 718 பேர் பலன் பெறுகின்றனர்.

அரசு தொழிற்பயிற்சி கல்லுாரியில் பயிலும் நிலையூர் மாணவன் விக்னேஷ் கூறுகையில், ''டிப்ளமோ மெக்கானிக்கல் பிரிவில் 2ம் ஆண்டு படிக்கிறேன். பொருளாதாரச் சூழலால், கல்விச் செலவை தந்தையிடம் கேட்க தயங்குவேன். தற்போது அரசு மாதம் ரூ. ஆயிரம் வழங்குவதால் புத்தகம், கல்வி உபகரணங்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறேன்'' என்றார்.

ஜெய்ஹிந்த்புரம் மாணவர் ஹயக்ரீவன் கூறுகையில், ''எனது குடும்பச் சூழலால் பகுதிநேரம் பணியாற்றி படிக்கிறேன். தற்போது அரசு மாதந்தோறும் உதவித்தொகை வழங்குவதால் கல்விச் செலவுக்கு யாரையும் எதிர்பார்க்க தேவையில்லை. செலவு போக சேமிக்கவும் முடிகிறது'' என்றார்.






      Dinamalar
      Follow us